வாக்காளர் பட்டியலில் குளறுபடி.. 'மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்' - தமிழிசை சவுந்தரராஜன்

வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வுசெய்தார்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி.. 'மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்' - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வுசெய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

"சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. "வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டார்கள். பிரச்சினை, சவால்களுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் சுமூகமாக தேர்தலை நடத்தியுள்ளதற்கு பாராட்டுக்கள்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. பூத் ஏஜென்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் திரும்பத் திரும்ப சரிபார்க்க வேண்டும். வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com