வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப் - பெ. சண்முகம் விமர்சனம்

கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப் - பெ. சண்முகம் விமர்சனம்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது;-

உலகத்திற்கே தான் தான் தலைவன் என்ற நினைப்பில் கம்யூனிசத்தை ஒழித்தே தீருவேன் என்று கொக்கரிக்கிறார் டிரம்ப். கம்யூனிசத்தை எவராலும் அழிக்க முடியாது. உலகில் சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிசமும் இருக்கும்.

வரலாற்றைப் படியுங்கள்

வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! ஹிட்லர், முசோலினிகளின் கதை முடிந்ததே தவிர, கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் வாய்க்கொழுப்புதான் உங்களுக்கு முதல் எதிரி!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com