வாசகர் வட்ட கூட்டம்

வீரவநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்ட கூட்டம்
Published on

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் நூலகத்தில் வாசகர் வட்ட மாதாந்திர கூட்டம் நடந்தது. இதில் 10-ம் வகுப்பில் சாதனை படைத்த வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதம் இலியாஸ் தலைமை தாங்கினார். சந்திரசேகர் வரவேற்றார். விழாவில் மாணவர்களை வாழ்த்தி கவிசுடர் முத்தையா, பழனி, பாத்துலிங்கம், ராமன் ஆகியோர் பேசினர். முனைவர் மைதீன் சிறப்புரையாற்றினார். வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினர். முடிவில், கவிஞர் உலகநாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com