தயார் நிலையில் அரசு பள்ளிகள்

அரசு பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.
தயார் நிலையில் அரசு பள்ளிகள்
Published on

தொண்டி,

தமிழகம் முழுவதும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அதன்படி திருவாடானை தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com