திட்டங்கள் நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் - ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

புதிய நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
திட்டங்கள் நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் - ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
Published on

சென்னை,

ரியல் எஸ்டேட் திட்டங்கள் நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்

அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. அந்த விதத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையமாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

புதிய உத்தரவு

இந்த ஆணையத்தின் தற்போதைய தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா இருக்கிறார். இந்நிலையில், ரியல் எஸ்டேட் திட்டங்கள் நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் திட்ட ஏற்பாட்டாளர்கள் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கட்டாயமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

திட்ட நிறைவு சான்றுதல்(கம்ப்ளீஷன் ஆப் ப்ராஜெக்ட் சர்டிபிகேட்), திட்ட அனுமதி ஆவணங்கள், பட்டய கணக்காளர் தணிக்கை, அறிக்கை விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை, ரூ.5,000 ஆய்வு கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அமலுக்கு வரக்கூடிய புதிய நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com