விநாயகர் சிலையை இலவசமாக வழங்க வேண்டும்; இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை

சதுர்த்தி விழா பூஜைக்கு விநாயகர் சிலைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விநாயகர் சிலையை இலவசமாக வழங்க வேண்டும்; இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை
Published on

இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி துணை தலைவர் மோகன்குமார், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், விநாயகர் சதுர்த்தி விழா பூஜைக்கு பொதுமக்களுக்கு இலவசமாக விநாயகர் சிலைகளை வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. அதை தடுக்க வேண்டும்.

அதேபோல் ரேஷன்அரிசியை திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதையும் தடுப்பதேடு, திருட்டுத்தனமாக ரேஷன்அரிசி விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனகூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com