பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை

பொன்னேரி அருகே தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை
Published on

அதிகாரிகளிடம் புகார்

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுளப்பாக்கம் என்ற கிராமம் பழவேற்காடு ஏரிக்கரை அருகே உள்ளது. இக்கிராமத்திற்கு செல்லும் வண்டி பாட்டை அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இறால் பண்ணைகள் அமைத்திருந்ததாக தெரிகிறது. இந்த இறால் பண்ணையின் இறால் கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுநீர் பழவேற்காடு ஏரியில் கலந்து மீன் இனங்கள் அழிந்து வருவதாக கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம், மீனவ நலத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அரசு நிலம் மீட்பு

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவையர்கள் மூலம் அரசு நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிறுளப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் வண்டி பாட்டை என்ற வகைப்பாடு கொண்ட அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அதில் இறால் பண்ணைகள் அமைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் திருப்பாலைவனம் போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். பின்னர், பொக்லைன் எந்திர உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com