போரூர் ஏரியில் வாலிபர் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

போரூர் ஏரியில் வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர் ஏரியில் வாலிபர் பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை
Published on

மதுரவாயல் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ராஜ்பரத் (வயது 24). பட்டதாரி வாலிபரான இவர், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால் தான் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும் அவரது நண்பருக்கு நேற்று முன்தினம் இரவு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் குதித்த வாலிபரை இரவு முழுவதும் 20-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் இறந்த நிலையில் ராஜ்பரத் உடலை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com