108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு 23-ந் தேதி நடக்கிறது.
108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு
Published on

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு 23-ந் தேதி நடக்கிறது.

ஆட்கள் தேர்வு

தமிழகம் முழுவதும் 108 அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) செயல்படுகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு (ஆம்புலன்ஸ்) ஆள் சேர்ப்பு முகாம் மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அலுவலகத்தில் நடக்கிறது.

அதில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு தகுதிகள் அறிவிக்கப்பட்டது. அதில் டிரைவருக்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். எழுத்துத்தேர்வு, தொழில்நுட்பதேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை திறன் மற்றும் மருத்துவம் தொடர்பான தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு என 5 வகைகளில் தேர்வு நடத்தப்படும். இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளர்

மருத்துவ உதவியாளருக்கு தகுதிகள் பின்வருமாறு:-

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்சி. நர்சிங், GNM, ANM, DMLT (பிளஸ்-2 பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி. இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.15,435 (மொத்த ஊதியம்). நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு. இந்த தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com