திருநெல்வேலி ஊர்க்காவல் படையில் 15 பேருக்கு பணி: 31ம் தேதிக்குள் மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்


திருநெல்வேலி ஊர்க்காவல் படையில் 15 பேருக்கு பணி: 31ம் தேதிக்குள் மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
x

ஊர்க்காவல் படை காவலர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 சன்மானமாக வழங்கப்படும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் மற்றும் உவரி கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் இணைந்து பணிபுரிய 15 மீனவ இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஊர்காவல்படையில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் ஆண்கள் 18 வயது முடிந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், நல்ல உடல் தகுதியுடன் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி (பத்தாம்) 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் ஊர்காவல் படை காவலர்களுக்கு காவல் துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவை புரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூ.280 மட்டுமே சன்மானமாக வழங்கப்படும். (அதிகபட்சமாக மாதத்திற்கு 10 அழைப்பு பணிகள் மட்டும்) இப்பிரிவில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் பயோடேட்டா, கல்வி மற்றும் வயது சான்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவினையும் 31.7.2025-ம் தேதிக்குள் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story