நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
 இன்று ரெட் அலர்ட்
Published on: 

நீலகிரி

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா எச்சரிக்கை விடுத்தார். அவர், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக, ஊட்டி செல்லும் மக்கள் மலைப்பாதைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில்,நீலகிரி மாவட்டத்துக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, நாகை ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com