நீலகிரிக்கு ரெட் அலர்ட்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு


நீலகிரிக்கு ரெட் அலர்ட்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு
x

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூன் 14) விடுமுறை அறிவிப்புக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story