பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கட்டணத்தை குறையுங்கள் - அண்ணாமலை

திமுக ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கட்டணத்தை குறையுங்கள் - அண்ணாமலை
Published on

சென்னை,

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. குற்றங்ள் அதிகமாக நடப்பது தெரியக்கூடாது என்பதற்காக குற்றங்களை பதிவு செய்ய காவல்துறை அனுமதி மறுக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனுப்புகிறது காவல்துறை.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக, மதுரையில் நாளை திட்டமிட்டபடி பாஜக மகளிரணி பேரணியைத் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் அமைப்பு புதிய தலைவரை நியமித்துள்ளது. அவர் நடத்தும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்கிறார்.

10 ஆயிரம் சிதிலமடைந்த பள்ளிகளை சீரமைப்போம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. எத்தனை பள்ளிகளை சீரமைத்துள்ளனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தனியார் பள்ளிகள் எதற்காக அரசுப் பள்ளிகளுக்கு சி.எஸ்.ஆர். கொடுக்க வேண்டும்; பள்ளியில் படிக்கிற நடுத்தர மக்களிடம் பணம் வாங்கித்தானே சி.எஸ்.ஆர் பண்ட் கொடுக்கிறார்கள் தனியார் பள்ளிகள் சி.எஸ்.ஆர். கொடுப்பதற்கு, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கட்டணத்தைக் குறையுங்கள்.

கடந்த ஆண்டு ரூ.90,000 கோடி கடன்; இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப் போறீர்கள்; வாங்குகிற கடனை என்னதான் செய்கிறீர்கள்? இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்க முடியவில்லை என்றால், என்ன அரசு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்?. எனது சாட்டை அடி போராட்டம் புரிய வேண்டியவர்களுக்கு புரியும். எனக்கும் பெண் குழந்தை உள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் தோல்வி அடைந்துள்ளது. அது சரியாகும் வரை சாட்டை அடி போராட்டத்தை விடப்போவதில்லை. செருப்பு இல்லாமல் நடக்கும்போதுதான் தெரிகிறது தமிழகத்தில் சாலைகள் சுத்தமாக இல்லை. திமுக ஆட்சி நிச்சயம் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com