திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு விமான கட்டணம் குறைப்பு

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக பல விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு விமான கட்டணம் குறைப்பு
Published on

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஒரு வழிப்பாதை சேவை கட்டணத்தை ரூ.3000 ஆக நிர்ணயம் செய்துள்ளது.

இந்த கட்டணமானது இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை தொடரும் என்று அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் குறைந்த செலவில் திருச்சியில் இருந்து பெங்களூருக்கு ஒரு வழி கட்டணமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com