வங்கி வேலை நேரம் குறைப்பு: தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வில்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வங்கி வேலை நேரம் குறைக்கப்படுவதாக தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் தளர்வில்லாத ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 6-ந்தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அனைத்து வங்கிகளுக்கும் தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வங்கி கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கி பரிவர்த்தனை நேரம் ஏற்கனவே அறிவித்தது போல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம் போல் மாலை 5 மணி வரை செயல்படும்.

வங்கி கிளைகளில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மாற்று முறையில் பணியில் ஈடுபட வேண்டும். ரொக்க பரிவர்த்தனை, ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு, என்.இ.எப்.டி., எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், ஐ.எம்.பி.எஸ்., எனும் உடனடி கட்டண சேவை மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., என்ற ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும், நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் போன்ற, சேவைகள் வாயிலாக பணம் அனுப்புதல், அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை வழங்க வேண்டும். ஏ.டி.எம்., ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com