உஜ்வாலா சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூர் கண்டனம்!

12 சிலிண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட மானியம் கடந்த ஆண்டில் 9 சிலிண்டர்களாக குறைக்கப்பட்டது.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஏழை பெண்களுக்கு மோடி பரிசு. உஜ்வாலா திட்டம்; பாஜகவின் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகிறது. 2016-ஆம் ஆண்டு 12 சிலிண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட மானியம் கடந்த ஆண்டில் 9 சிலிண்டர்களாக குறைக்கப்பட்டது.

4 சிலிண்டர் மானியம்

இன்று வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும் ,மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது.“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது. உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாததால் குறைவாக பயன்படுத்துகின்றனர், தேவை இல்லாததால் அல்ல, இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழைக்கப்பட்ட துரோகம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com