11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் இருந்து நடைபெற இருக்கும் பொதுத்தேர்வுக்கான பணிகல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமாக செய்முறைத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50 ஆக இருந்தது. இது தற்போது 30 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 200 மதிப்பெண்களை கொண்ட ஒரு பாடத்தின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களும் 50 லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.

எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். மதிப்பெண்கள் குறைந்துள்ள காரணத்தினாலும், கூடுதல் நேரம் இருக்கின்ற காரணத்தினாலும், தேர்வுகளை விரைவாக முடிப்பதற்காகவும் இந்த தேர்வுகள் 3 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரம் குறைப்பினால், மாணவர்களுக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com