ரீல்ஸ் மோகத்தில் விபரீதம்: ரேஷன் கடைக்கு தீ வைத்த விற்பனையாளர் பணியிடை நீக்கம்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்து அதில் அதிகப்படியான லைக்குகளை விற்பனையாளர் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
ரீல்ஸ் மோகத்தில் விபரீதம்: ரேஷன் கடைக்கு தீ வைத்த விற்பனையாளர் பணியிடை நீக்கம்
Published on

சேலம்,

ரேஷன் கடை விற்பனையாளர்

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நாச்சியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தாதாபுரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், உயர் அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளையும் வீடியோவாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவேற்றம் செய்து அதில் அதிகப்படியான லைக்குகளை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 16-ந் தேதி அன்று ஹேமலதா பணியில் இருந்தபோது ரேஷன் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதனிடையே கடையில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஹேமலதா தெரிவித்தார்.

பணியிடை நீக்கம்

இதுகுறித்த புகாரின்பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமலதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ரீல்ஸ் மோகத்தில், மண்எண்ணெயை ஊற்றி அரிசி மூட்டைக்கு தீவைத்த விபரீதம் தெரியவந்தது. இதைய டுத்து நேற்றுமுன்தினம் ஹேமலதாவை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஹேமலதா, ரேஷன் கடைக்கு தீ வைத்து விட்டு விபத்து என நாடகம் ஆடியது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து சேலம் பொன்னி கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் பாலமுருகன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com