நிலுவை வழக்குகள் குறித்து சட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு துறைகளின் சார்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது
நிலுவை வழக்குகள் குறித்து சட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசு துறைகளின் சார்பில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கோர்ட்டுகளில் போலீஸ் துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com