பஸ் ஸ்டிரைக் குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டர் மூலமாக நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை

பேச்சு நடத்த வேண்டும், பஸ் ஸ்டிரைக் குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டர் மூலமாக நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்து உள்ளார்.#Kamalhaasan / #BusStrike
பஸ் ஸ்டிரைக் குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டர் மூலமாக நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை
Published on

சென்னை

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடப்பு விவகாரங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த கமல், மீண்டும் அரசியல் தெடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தெடங்கி உள்ளார். இந்த நிலையில் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் பஸ் ஸ்டிரைக் குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டர் மூலமாக நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்து உள்ளார்

மக்களின் இன்னல்களையும் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் மனதில் கொண்டு பேச்சு நடத்த வேண்டும்; பிரச்னையை தீர்ப்பதே பொங்கலுக்கு அரசு தரும் விலை மதிப்பில்லா பரிசாகும் என கூறி உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் ஓடவில்லை. பல

இடங்களில் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். சென்னையில் நேற்றிரவு 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இன்று இரண்டாவது நாளாகவும் பஸ்கள் ஓடவில்லை.

#Kamalhaasan / #BusStrike / #TransportStrike / #ChennaiBusStrike

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com