கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது-வருவாய் நிர்வாக ஆணையர்

கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார்.
கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது-வருவாய் நிர்வாக ஆணையர்
Published on

சென்னை,

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ள மத்திய குழு, இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் முலம் புறப்பட்டனர்.

இந்த குழுவுடன், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலும் சென்றுள்ளார். அங்கிருந்து காரில் புதுக்கோட்டை செல்கிறார்கள்.

முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் கந்தர்வகோட்டை பகுதியில் அருந்ததியர் காலனி, சோழகம்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியம்பட்டி, நெற்புகை, வீரடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களை பார்வையிடுகின்றனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யகோபால், கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com