

திருச்சி,
திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினர்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கூற சிலர் தயக்கம் காட்டுகின்றனர், பெற்றோர்கள் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் .
மேலும், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்கப்படுவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.