பக்தர்களை பாதுகாப்பது குறித்து ஒத்திகை

ரோப்கார் விபத்து ஏற்பட்டால் பக்தர்களை பாதுகாப்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது.
பக்தர்களை பாதுகாப்பது குறித்து ஒத்திகை
Published on

சோளிங்கரில் மலையில் அமைந்துள்ள யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ரூ.9 கோடியே 30 லட்சத்தில் ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பக்தர்கள் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படநேர்ந்தால் அப்போது ரோப்காரில் இருந்து பக்தர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து சோதனை செய்து, பக்தர்களை மீட்பது குறித்து செயல்முறை வளக்கம் செய்து காண்பித்தனர். கோவில் உதவி ஆணையர் ஜெயா, கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் ரோப்கார் அமைக்கும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com