அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கடந்தாண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேதலின்போது, போடிநாயக்கனூ தொகுதியில் அதிமுக சாபில் முன்னாள் துணை முதல்வா ஓ.பன்னீசெல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றா. இதனை எதித்து, அந்தத் தொகுதி வாக்காளா மிலானி என்பவா சென்னை ஐகோர்ட்டில் தேதல் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில் ஓ.பன்னீசெல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்ததாகவும், வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டிருந்தா. இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்து வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் இவ்வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீசெல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், தேதல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீசெல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com