ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
Published on

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராயம்பாளையத்தில் அவினாசி ரேக்ளா நண்பர்கள் மற்றும் ராயம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக முதல் முறையாக ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தயத்தில் கலந்து கொண்ட மாடுகளை வீரர்கள் அதிவேகமாக ஓடச்செய்து இலக்கை அடைந்தனர்.ரேக்ளா பந்தயத்திற்கு திருப்பூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் காங்கயம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என்று 2 பிரிவுகளில் ரேக்ளா பந்தயம் நடந்தது.

பந்தயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு திருப்பூர் தெற்கு தெகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ. தங்க காசுகளை பரிசாக வழங்கினார். ரேக்ளா பந்தயம் நடைபெறும் சாலைகளில் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதற்கு பின்னால் கூடி நின்று ஆர்வமாக ரேக்ளா போட்டியை கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com