கொரோனாவால் இறந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை

கொரோனாவால் இறந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவால் இறந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை
Published on

சென்னை,

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிர் இழப்பவர்களின் இறுதி சடங்குகள் அவரவர் மத வழக்கங்களின் படி உரிய மரியாதையுடன் நடைபெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல்கள் உள்ளது. குடும்பத்தினரின் நியாயமான சில எதிர்பார்ப்புகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

முக்கியமாக, இறந்தவர்களின் முகத்தை இறுதியாக பார்க்க சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும். இறந்தவர்களின் முகத்தை பார்க்க, குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சம் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். பொது நலன் கருதி, அவர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் வர நிபந்தனை விதிக்கலாம். இது குறித்து தமிழக அரசு மனிதாபிமானத்தோடு நல்ல முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com