கோவில் விழாவுக்கு சென்ற வாலிபர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவில் விழாவுக்கு சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து, நெல்லையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் விழாவுக்கு சென்ற வாலிபர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Published on

நெல்லை:

கோவில் விழாவுக்கு சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து, நெல்லையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலிபர் கொலை

நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவருடைய மகன் சேதுபதி (வயது 20). இவர் கடந்த 3-ந்தேதி தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கருவந்தாவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். அங்கு நடந்த கோவில் விழாவுக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி சென்ற சேதுபதியை மர்மநபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சேதுபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

போராட்டம்

இதற்கிடையே கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சேதுபதியின் உடலை வாங்க மறுத்து, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலையாளிகளை கைது செய்யும் வரையிலும், சேதுபதியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com