தமிழகத்தில் டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிமுறைகளில் தளர்வு

டாஸ்மாக் பார்களுக்கான பழைய உரிமக் காலம் அண்மையில் நிறைவடைந்தது.
தமிழகத்தில் டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிமுறைகளில் தளர்வு
Published on

சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது..

அதன்படி, இதுவரை டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டியே (இணைந்தே) பார் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்களைத் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு '15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக' உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய டெண்டர் மற்றும் தளர்வு விதிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட நபர்கள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தும் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, புதிய நபர்களுக்கும் ஏலம்/டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு உருவாகும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் பார்களுக்கான பழைய உரிமக் காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகளை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக பார்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

பார் அமைப்பதற்கான இட அமைப்பில் தளர்வுகள் தரப்பட்டாலும், பார்களில் பீடி-சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com