குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை tnpscexams.in என்ற இணையத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com