தேசிய கட்டிடக்கலை திறன் தேர்வு முடிவு வெளியீடு

தேசிய கட்டிடக்கலை திறன் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிடக்கலை திறன் தேர்வு முடிவு வெளியீடு
Published on

சென்னை,

நாடு முழுவதும் இருக்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு தேசிய கட்டிடக்கலை திறன் தேர்வு (என்.ஏ.டி.ஏ.) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான முதற்கட்ட தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி நாடுமுழுவதும் ஆன்லைனில் நடைபெற்றது. இந்த தேர்வை 22 ஆயிரத்து 843 பேர் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் 19 ஆயிரத்து 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதற்கட்ட தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாதவர்கள், இணையவசதி சரியாக இல்லாததால் உரியமுறையில் தேர்வு எழுத இயலாதவர்கள் வருகிற 12-ந்தேதி நடைபெறும் 2-ம் கட்டத்தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com