2022-ம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு: சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி 2-ந் தேதி வெளியாகும்

2022-ம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு: சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி 2-ந் தேதி வெளியாகும் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு.
2022-ம் ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு: சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி 2-ந் தேதி வெளியாகும்
Published on

சென்னை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ், இந்திய வனப்பணி, என்ஜினீயரிங் சேவைகள் பணி உள்பட பல்வேறு பணிகளுக்கான காலி இடங்களுக்கு எழுத்து தேர்வுகளை நடத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேர்வு குறித்த அட்டவணையை யு.பி.எஸ்.சி. அதன் இணையதளத்தில் வெளியிடும். அந்தவகையில் 2022-ம் ஆண்டுக்கான அட்டவணையை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்படக்கூடிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. அதன்படி, சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 5-ந் தேதியும், முதன்மைத் தேர்வு செப்டம்பர் 16-ந் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய வனப்பணிகளுக்கான அறிவிப்பு, என்ஜினீயரிங் சேவைப்பணிகள், ஒருங்கிணைந்த புவி அறிவியல் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பும் அதில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வு அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 7, 8, 9, 15 மற்றும் 16-ந் தேதிகளிலும், இந்திய வனப்பணிகளுக்கான முதன்மைத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி தொடங்கி, மார்ச் 8-ந் தேதி வரையிலும் நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com