2021-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட பட்டியல் வெளியீடு

2021-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணையத்தின் திட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் குரூப்-4 பதவிக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட பட்டியல் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும் என்ற ஆண்டு திட்ட பட்டியலை வெளியிடும். அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது.

அதில், 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்தெந்த பதவிகளுக்கு எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட பட்டியலில், பெரும்பாலானோர் கலந்துகொண்டு தேர்வு எழுதக்கூடிய ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திலும், ஒருங்கிணைந்த குரூப்-4 பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்திலும் வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளுக்கான அறிவிப்பு குறித்த தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் குரூப்-1 பதவிக்கான அறிவிப்பு இடம்பெறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர அந்த பட்டியலில் 2019-20-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாணைப்படி வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி ஒருங்கிணைந்த குரூப்-1 பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற இருக்கிறது என்றும், அதேபோல் வணிகம், தொழில்துறையின் உதவி இயக்குனர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் உதவி மேற்பார்வையாளர் பதவிக்கு ஜனவரி மாதம் 9, 10-ந் தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு திட்ட பட்டியல்படி அறிவிப்பு எதையும் அரசு பணி யாளர் தேர்வாணையம் வெளியிடவில்லை. எனவே அந்த அறிவிப்பில் இருந்த காலிப்பணி யிடங்களுடன், 2021-ம் ஆண்டு அறிவிப்பின் போது இருக்கும் காலிப்பணி இடங்களுடன் சேர்த்து அறிவிப்பு வெளியிடப் படுமா என்பது தேர்வர்கள் பல ரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com