அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பை பேஸ்புக் பக்கத்தில் இருந்து ஜெ.தீபா நீக்கினார்

அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பை பேஸ்புக் பக்கத்தில் இருந்து ஜெ.தீபா நீக்கி உள்ளார்.
அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பை பேஸ்புக் பக்கத்தில் இருந்து ஜெ.தீபா நீக்கினார்
Published on

சென்னை,

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதனை அதிமுகவுடன் இணைப்பதாக கூறினார். இந்த நிலையில், முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என தீபா கூறி இருந்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேஸ்புக்கில் கூறி இருந்ததாவது:-

ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள். பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.

முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கு அரசியல் வேண்டாம். என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டாம். மீறி அழைத்தால் போலீசில் புகார் செய்வேன். எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம் என தீபா கூறி உள்ளார்.

இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பை முகநூல் பக்கத்தில் இருந்து ஜெ.தீபா நீக்கினார். பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாக ஜெ.தீபா அறிவித்திருந்ததால் பேரவை நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேரவையை கலைக்க வேண்டாம் என்று நிர்வாகிகள் வற்புறுத்தியதால் மனம் மாறியதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com