விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்திற்கு நிவாரணத்தொகை: ஜிகே வாசன்


விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்திற்கு  நிவாரணத்தொகை: ஜிகே வாசன்
x

திடீர் மழையால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் பெய்த திடீர் மழையால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்திற்கு ஈடாக நிவாரணத்தொகையை தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 5, 6 நாட்களாக பெய்த திடீர் மழையால் விவசாயத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story