பொரசப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியில் இருந்து விடுவிப்பு

பொரசப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டா.
பொரசப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியில் இருந்து விடுவிப்பு
Published on

மூங்கில்துறைப்பட்டு:

சங்கராபுரம் ஒன்றியம் பொரசப்பட்டு ஊராட்சி செயலாளராக பணியாற்றியவர் ராமச்சந்திரன். இவர், ஊராட்சியில் சரிவர பணிகள் செய்யவில்லை, ஊராட்சியில் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டத்திற்கு வருவதில்லை, 15-வது மானிய குழுதிட்டப்பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தினை சரிவரஒத்துழைப்பு வழங்கவில்லை, ஊராட்சியில் நடைபெறும் பணிகளில் விரைந்து செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, மேற்கண்ட புகார் குறித்து விளக்கம் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ராமச்சந்திரனை பணியில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com