

சென்னை,
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மூன்றாவது நாளாக இன்று, தமிழகத்தில் பெய்த பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம், கீழ்க்கட்டளை (அம்பாள் நகர்) பரம், உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது, அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், மகளிர் அணிச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சின்னையா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.