சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க சார்பில் நிவாரணப் பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, சென்னை மாநகராட்சி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது, கழக அமைப்புச் செயலாளர் பிரபாகர், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், வர்த்தக அணிச்செயலாளர் வெங்கட்ராமன்,தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் விருகை. ரவி, உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com