கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகளை உடனே வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Published on

சென்னை,

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மஞ்சள் அழுகல் நோய் போன்றவற்றால் நஷ்டமடைந்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளை அதிகாரிகள் நேரில் சந்தித்து, கரும்பு பாதிப்பு குறித்து கணக்கெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கரும்புகளை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகளை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com