

புதுடெல்லி,
நேபாளத்திற்கு இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அது என்ன? என்பதை பார்ப்போம்.
பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் அவசர கால நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக 10 டன்னும், 2-வது கட்டமாக 37.5 டன்னும் என மொத்தம் 47.5 டன் நிவாரணப் பொருட்கள், காசியாபாத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில், தற்காலிக கூடாரங்கள், போர்வைகள் மற்றும் தூக்கப் பைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், சூரியசக்தி விளக்குகள், சுகாதாரப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், குளோரின் மாத்திரைகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பொருட்களும் அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக அடைத்து அனுப்பப்பட்டுள்ளன. அந்த அட்டை பெட்டியில், வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, "இந்திய மக்களும், இந்திய அரசும் வழங்கும் பரிசுப் பொருள்" என்று எழுதப்பட்டுள்ளது.