தமிழகத்தில் இந்திய வனப்பணி அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் இந்திய வனப்பணி அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் இந்திய வனப்பணி அதிகாரிகள் இடமாற்றம்
Published on

சென்னை,

தமிழகத்தில் இந்திய வனப்பணி அதிகாரிகள் (ஐ.எப்.எஸ்.) பலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, அரசு ரப்பர் கழக தலைவரும், முதன்மை தலைமை வனப்பாதுகாவலருமான முசாமில் அப்பாஸ் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனப்படை பிரிவு தலைவராக) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளான அசோக் உப்ரேட்டி, யோகேஷ் திவேதி, சேகர் குமார் நிரஜ், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ஆகாஷ் தீப் பருவா, டெபாசிஸ் ஜனா, மஞ்சுநாதா, கருணப்பிரியா, நாகநாதன், நிகர் ரஞ்சன், பத்மாவதே ஆகியோரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com