

அதிமுகவின் சொத்துகளை அபகரிப்பதாகவும், கட்சியை லெட்டர் பேட் கட்சியாகவும் மாற்றி விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமியை தவெக அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். நிர்மல் குமாரின் இந்த பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமி மீதும், கட்சியின் மீதும் அவதூறு பரப்பியதாகக் கூறி, நிர்மல் குமார் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ரூ. 1 கோடி இழப்பீடு வேண்டும் என்றும் அதிமுக நோட்டீஸ் அனுப்பியது.
அதிமுக தரப்பில் இருந்து அனுப்பபட்ட நோட்டீஸ்க்கு பதில்ளித்த அமைச்சர் நிர்மல் குமார், "அதிமுகவில் தலைமைப் பிரச்னை இருப்பதாக பொது ஆவணங்களே கூறுகின்றன. கட்சியின் தலைவரை விமர்சித்தால், அது கட்சியின் மீதான அவதூறு ஆகாது. அவர் தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவில்லை. கட்சியின் வாயிலாக நோட்டீஸ் அனுப்பியதால், நோட்டீஸ்க்கு பதிலளிக்க முடியாது. அதிமுக கோரியபடி பகிரங்க மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ. 1 கோடி இழப்பீடும் வழங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.