ஆசிரியர் தினம்: எனது அரசியல் குருவை நினைவுகூர்கிறேன் - குஷ்பூ டுவீட்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.
ஆசிரியர் தினம்: எனது அரசியல் குருவை நினைவுகூர்கிறேன் - குஷ்பூ டுவீட்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் 80-களில் அதிகமான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை குஷ்பூ, அதன் பிறகு, 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைவராக இருக்கும் நேரத்தில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியில் காலெடுத்து வைத்தார்.

அதன் பிறகு, 2014இல் திமுகவில் இருந்து விலகி, சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு 2020 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020 அக்டோபரில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது தமிழக அரசியலில் முக்கிய பிரமுகராக வலம் வருகிறார். குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

இன்று செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் ஆசிரியர் பற்றியும், தங்கள் ரோல் மாடல் குறித்தும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதே போல நடிகை குஷ்பூவும் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அரசியல் பள்ளியில் எனது முதல் ஆசிரியர் என அவர் முதலில் அரசியல் களம் கண்ட திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com