போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பதாகைகள் அகற்றம்

ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவன பதாகைகள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பதாகைகள் அகற்றம்
Published on

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் பதாகைகளை அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையிலும் தனியார் நிறுவனங்களால் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருங்காலங்களில் இது போன்று போக்குவரத்திற்கு இடையூறாக பெயர் பதாகைகளை வைக்கக்கூடாது எனவும் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களிடம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com