

மதுரை,
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடக்கக்கூடிய நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல்வேறு கடைகளால் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி, மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு அகற்றினர். இதே போல் மதுரை மாநகராட்சியில் உள்ள பிற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.