கோவில் திருவிழாவையொட்டி அகில்கரை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில் திருவிழாவையொட்டி அகில்கரை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கோவில் திருவிழாவையொட்டி அகில்கரை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற பால்குடம், பறவை காவடியை திருமயம் சிவன் கோவிலில் இருந்தும், பல்வேறு கிராமங்களில் இருந்து எடுத்துக்கொண்டு அகில் கரை வழியாக கோவிலுக்கு செல்ல உள்ளனர். இந்தநிலையில் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து இருந்தனர். இதையடுத்து, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அகில்கரை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கொட்டகைகளை திருமயம் ஊராட்சி தலைவர் சிக்கந்தர் தலைமையிலான பணியாளர்கள் அகற்றி அப்புறப்படுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com