ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

திருக்கோவிலூர் அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
Published on

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் சுமார் 420 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் ஒரு பகுதி மற்றும் ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால், பாசன வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் விளை நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரி விஜயா தலைமையிலான அதிகாரிகள் வீரபாண்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஏரி மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்பை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அரகண்டநல்லூர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com