பெயர் பலகை, கொடிக்கம்பங்கள் அகற்றம்

பாவூர்சத்திரம் அருகே பெயர் பலகை, கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது.
பெயர் பலகை, கொடிக்கம்பங்கள் அகற்றம்
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே மாடியனூர் பகுதியில் சாலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெயர் பலகைகளை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு காடுத்தனர்.

அதன்படி நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாவூர்சத்திரம் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று 3-க்கும் மேற்பட்ட பெயர் பலகைகள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்றினர். மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com