ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலை எல்.ஐ.சி. அலுவலகம் முதல் திருவேங்கடம் சாலை சந்திப்பு வரை உள்ள மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதற்காக சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் மூன்று நாட்களாக ஆட்டோ மூலம் அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிலர் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றாத இடங்களில் நேற்று சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர்கள் சின்னத்தம்பி, பலவேசம், நகராட்சி கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையொட்டி சங்கரன்கோவில் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com