

எரியோடு அருகே உள்ள தொட்டணம்பட்டியில் இருந்து குஜிலியம்பாறை அருகே உள்ள தி.கூடலூர் வரை சாலை விரிவாக்க பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் சாலையோரத்தில் உள்ள பழமை வாய்ந்த மரங்களும் வெட்டி அப்புறப்படுத்தப்படுகின்றன. அதன்படி குஜிலியம்பாறையில், மெயின் ரோட்டில் இருந்த சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான 2 வேப்ப மரங்கள் நெடுஞ்சாலைத்துறையினரால் வேரோடு அகற்றப்பட்டது.