அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஓ.பன்னீர் செல்வம் புகைப்படங்கள் அகற்றம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஓ.பன்னீர் செல்வம் புகைப்படங்கள் அகற்றம்
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அன்றைய தினம் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதல் பெரிய கலவரமாகியது.

இதில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் சேதமானது.

இதனையடுத்து புதிய பேனர்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேனர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், புதிய பேனர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில், சுற்றுச்சுவரின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள பேனரில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com